தமிழக சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை எனக் கூறி தொடர்ந்து 2-வது நாளாக அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ளச்சாராயம் குடித்தவர்கள் காலதாமதமாக சிகிச்சைக்கு வந்ததே இறப்பிற்கு காரணம் என அமைச்சர் கூறுவது பச்சை பொய் என்று கூறினார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் என்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பேசியது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.