இயக்கப்படாமல் தனியார் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேறு மாநில பதிவு எண் ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்வதில் போக்குவரத்து துறை அதிகாரிகள் முனைப்பு காட்டுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வேறு மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்திற்குள் இயக்கக் கூடாது எனவும், அதன் பதிவு எண்களை மாற்றிக் கொள்ளவும் அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆய்வுக்குச் சென்ற போக்குவரத்து துறையினருக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.