நீட் தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடுகளும், குளறுபடிகளும் நடந்திருக்குமோ? என எழுந்துள்ள ஐயத்திற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டுமென பா.ம.க நிறுவனர் ராமதாசு வலியுறுத்தி உள்ளார்.
மைனஸ் மதிப்பெண் என்ற நடைமுறை கடைபிடிக்கப்படும் போது ஒரு தவறான விடையளிக்கும் மாணவர் 5 மதிப்பெண் வரையில் குறைந்து விடுவார் என்ற நிலையில் 720-க்கு 719 என்ற மதிப்பெண் பெறுவது சாத்தியம் இல்லை.
ஆனால், ஏராளமான மாணவர்கள் 719, 718 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். எனவே, பயனற்ற நுழைவுத்தேர்வுகளுக்கு முடிவு கட்ட வேண்டுமென ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.