பட்டியலின சமூகத்தினர் குறித்து பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் பேசியதாக சமூகவலைதளங்களில் ஆடியோ பரவிய நிலையில், அது தனது ஆடியோ இல்லை என்று போலீசில் கார்த்திக் புகார் அளித்துள்ளார்.
மயிலாப்பூர் துணை ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ள புகாரில், போலி ஆடியோவை பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சைபர் கிரைம் ஏ.டி.ஜி.பி-க்கு பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.