தனது சகோதரியை காதலித்து ஏமாற்றியவரை கொலை செய்யும் திட்டத்துடன் சென்னை மெரினாவில் காரில் சுற்றிய 4 சிறுவர்களை போலீஸார் கைது செய்து தலா 4 கத்தி மற்றும் செல்ஃபோன்களை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர்கள் எனவும், அதேப்பகுதியைச் சேர்ந்த தீனா என்பவரை கொலை செய்யும் நோக்குடன் அவரது வீட்டிற்கு சென்றுபோது அங்கு ஆட்கள் அதிகமாக இருந்ததால் பெசன்ட் நகரில் நள்ளிரவு வரையில் இருந்து விட்டு அதிகாலை நேரத்தில் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.