சென்னையில் மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வளசரவாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிக்காக தடுப்பு அமைக்கப்பட்டு சாலையில் பள்ளம் தோண்டியது குறித்து வேல்முருகன் கேள்வி எழுப்பி தன்னை தாக்கியதாக மெட்ரோ ரயில் உதவி மேலாளர் வடிவேலு அளித்த புகாரில், ஆபாசமாக திட்டுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள வேல்முருகன், சாலை தடுப்புகள் குறித்து கேட்க சென்ற தன்னை மெட்ரோ ரயில் அதிகாரி தான் ஆபாசமாக திட்டியதாக கூறியுள்ளார்.