சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அமரும் நாற்காலிகள் மற்றும் செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றக்கூடிய இயந்திரத்தின் பின்புறத்தில் கரப்பான் பூச்சிகள் இருப்பதை அங்கு வந்த பொதுமக்களில் ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக, மருத்துவமனையின் நிலை அதிகாரி உமாபதியிடம் கேட்டபோது, மருத்துவமனையை அடிக்கடி சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருப்பதாகவும், புகார் தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுத்து நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கான அனைத்து வசதிகளும் செய்யப்படும் எனவும் உறுதி அளித்தார்.