சென்னை மேற்கு மாம்பலத்தில், தன்னை விட 20 வயது குறைவான மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் 2 குழந்தைகளையும் கொடூரமாக கொன்ற தந்தை பிறகு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மோகன்- யமுனா தம்பதிக்கு இடையே ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்த நிலையில் காவல்நிலைய சமரசத்தின் பேரில் இருவரும் சேர்ந்து வசித்துவந்துள்ளனர்.
நேற்று மாலை பணி முடிந்து யமுனா வீட்டிற்கு திரும்பியபோது, 13 வயது மகள் சாய் ஸ்வாதியை கழுத்தை அறுத்தும், 5 வயது மகன் தேஜஸை கழுத்தை நெரித்தும் கொன்றுவிட்டு, மோகனும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
சமாதானம் ஆன பிறகும் அதிருப்தி விலகாததால் மோகன் இவ்வாறு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.