மாடு முட்டுவது, நாய் கடிப்பது போன்ற சம்பவங்கள் உள்ளூர் பிரச்சனை மட்டுமல்ல, அது தேசிய அளவில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளர்ப்புப் பிராணிகள் தொடர்புடைய சட்டங்கள் மிகக் கடுமையாக உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கூறுவது போல் உடனடியாகச் சென்று பிராணிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் கூறினார்.
சில வெளிநாட்டு நாய் இனங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தாலும் அந்தத் தடைக்கு சென்னை, கர்நாடகா உள்ளிட்ட சில உயர்நீதிமன்றங்கள் இடைக்காலத் தடை விதித்திருப்பதாகக் கூறிய ராதாகிருஷ்ணன், நாய் உள்ளிட்ட எந்தவொரு விலங்குக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமும் எங்களுக்கு கிடையாது என்றார்.