சென்னை பள்ளிக்கரணை பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த, பாஜக பட்டியல் அணி மாவட்ட தலைவரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான மதனகோபால், அப்பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாகக் கூறி, 10 பேருடன் மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று லைன் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார்.