சென்னை, சௌகார்பேட்டை மின்ட் சாலையில் வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான 667 கிராம் எடையுள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சௌகார்பேட்டையில் உள்ள நகை பட்டறையில் கொடுப்பதற்காக கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் நகைகளை உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.