2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக்கின் சாந்தோம் வீடு மற்றும் புரசைவாக்கம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
போதை பொருட்கள் விற்பனை மூலம், சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்தது குறித்து அமலாக்கத்துறை விசாரித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாஃபர் சாதிக்கின் நண்பரும், தொழில் பங்குதாரருமான திரைப்பட இயக்குநர் அமீரின் தியாகராய நகர் ராஜா தெருவில் உள்ள அலுவலகத்தில் சில ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிவித்த அதிகாரிகள், சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.
புகாரி உணவகத்தின் உரிமையாளர்களில் ஒருவரான இர்ஃபான் புகாரி தொடர்புடைய இடங்களிலும் சோதனையிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜாஃபர் சாதிக்குடனான தொடர்பு குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.