ஆந்திராவில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் வந்த ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில் ஞானவேல் என்பவரிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் உதவியுடன் 30 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
நகை வாங்க பணம் கொண்டு வந்ததாக கூறிய நிலையில், உரிய ஆவணங்களை காட்டி திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கூறி வருமான வரித் துறையினரிடம் பணத்தை போலீசார் ஒப்படைத்தனர்.