இலவச திட்டங்களை வழங்குகிறோம் எனக் கூறி இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் பேரில் மத்திய மாநில அரசுகள் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சேலம் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ்குமாரை ஆதரித்து, ஓமலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட சீமான்,தாலிக்கு தங்கம் வழங்குவதை சாதனை என்று கூறுகிறார்கள், தமிழ்நாட்டு மக்களை குடிக்க வைத்ததும் சாதனை தானே என்றார்.