சென்னையை அடுத்த கானாத்தூரில் கராத்தே மாஸ்டரை அடித்து கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசிய வழக்கில் பெண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டிகுப்பம் பகுதியில் கராத்தே மற்றும் யோகா வகுப்புகள் நடத்திவந்த லோகநாதன் கடந்த 13ஆம் தேதி காணாமல் போன நிலையில், தாழம்பூர் பகுதியில் கிணறு ஒன்றில் உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
யோகா வகுப்புக்கு வரும் சுரேஷ் என்பவரின் மனைவி கஸ்தூரியுடன் லோகநாதன் கடைசியாக பேசியது தெரியவந்ததையடுத்து, போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். கஸ்தூரி, லோகநாதனுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும்.
சுரேஷ் மனைவியை கண்டித்து, சமாதானப்படுத்தி தனது வீட்டிற்கு லோகநாதனை வரவைத்து கூட்டாளிகளுடன் சேர்ந்து கட்டையால் அடித்து கொலை செய்து கிணற்றில் வீசியதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.