2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் நெட்வொர்க் எங்கெல்லாம் உள்ளது என்ற தகவல்களை அறிய விசாரணை மேற்கொண்டுள்ளதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்துள்ள அவர்கள், சென்னைக்கு அழைத்து வந்து போதை பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துக்கள், அவருடன் தொடர்புடைய நபர்கள் குறித்த விவரங்களை பெறவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் போதைப்பொருள் கடத்தலில் குருவியாக தொடங்கிய ஜாஃபர், மாஃபியா தலைவனாக மாறி வெளிநாடுகளில் எங்கெங்கு போதைப் பொருட்களை கொண்டு சென்றார் என்பது பற்றியும் விசாரித்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.