சென்னை ஓரகடத்தில் காரில் கடத்தப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை போலீஸார் கைப்பற்றினர்.
ஆவடி காவல் ஆணையரின் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார் மெத்தபெட்டமைன் கடத்தியதாக 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெங்களூரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் அதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.