மாரடைப்பிற்கான காரணங்களை கண்டறிவது மற்றும் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அதி நவீன மருத்துவ உபகரணங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று கொண்டு வந்தார்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் ரத்த தானம் முகாமையும் அவர் தொடங்கி வைத்தார்.