டார்க் நெட் மூலம் இந்தியா முழுவதும் எல்.எஸ்.டி. போதை ஸ்டாம்புகளை விற்று வந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டதாக சேலத்தைச் சேர்ந்த நபர், பாலிவுட் உதவி இயக்குநர் ஒருவர், ஐ.டி. ஊழியர்கள் உள்ளிட்ட 14 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பல் ஜெர்மனியில் இருந்து போதை ஸ்டாம்புகளை ஆர்டர் செய்து பின்னர் இந்தியா முழுவதும் உள்ள தங்கள் ஏஜண்டுகளுக்கு போஸ்ட் மூலம் அவற்றை அனுப்பி விற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.