சென்னையில் விமான நிலையத்திலிருந்து, துபாய் நாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த மோசடி வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி பஷீர் முகமது (வயது-51) என்பவர் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பாஸ்போர்ட், ஆவணங்கள், சோதனையில் கண்டுபிடித்து, அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து கேரள மாநிலம் மலப்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.