சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற குளிரூட்டப்பட்ட 70 கட்டண அறைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
30 கோடி ரூபாய் செலவில் அதி நவீன உபகரணங்களுடன் கூடிய 10 உயர் சிறப்பு அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவையும் தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் செய்தியாளரை சந்தித்தார்.