2014-இல் 500-க்கும் குறைந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலை மாறி தற்போது உலகளவில் இந்தியா மூன்றாவது அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கொண்ட நாடாகி இருப்பதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகளவில் நடக்கும் டிஜிட்டல் பேமெண்டுகளில் 42% இந்தியாவில் நடப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார உள்கட்டமைப்பு மட்டுமின்றி சமூக உள்கட்டமைப்பிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள அவர், 2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றிக் காட்ட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு பிரதமர் செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கும் அனுராக் தாகூர் பதிலளித்தார்.