சென்னை, எண்ணூர் முகத்துவாரத்தில் கச்சா எண்ணெய் கழிவு படர்ந்துள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் செயலாளர் சுப்ரியா சாகு படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
எண்ணெய் படலம் அகற்றும் பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், எந்த அளவிற்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளது என ஆய்வு மேற்கொண்டபிறகு, நெட்டுக்குப்பம் பகுதியில் எண்ணெய் கசிவு மேலாண்மை ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதனையடுத்து செய்தியாளரை சந்தித்த சுப்ரியா சாகு, இதுவரை சுமார் 60 டன் ஆயில் கலந்த தண்ணீர் அகற்றப்பட்டுள்ளதாகவும், நாளை முதல் 25 நாட்கள் அலையாத்தி காடு பகுதியில் எண்ணெய் படலம் அகற்றும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.