தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடம் ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனை செய்து, அதன் மாதிரிகளை எடுத்து எந்த வகையான வைரசால் காய்ச்சல் பரவுகிறது என்பது ஒரு வாரத்தில் கண்டறியப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
வேளச்சேரி நூறடி சாலையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்த பின் பேட்டியளித்த அவர், சபரிமலைக்கு செல்லும் அனைவருக்கும் பரிசோதனை அவசியமில்லை என்றும் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.