பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், அரசு துறைகளில் அவுட்சோர்சிங் முறையில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
சென்னையில் அந்த அமைப்பின் உயர்மட்ட குழு கூட்டத்திற்குப் பின் பேட்டியளித்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக தங்கள் சங்கத்தைச் சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக தெரிவித்தார்.