சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மத்தியக் குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கலம், சமத்துவப் பெரியார் நகர், வரதராஜபுரம், முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அவர்கள், மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள டீவி, பிரிட்ஜ் போன்ற உடைமைகளையும் பார்வையிட்டனர்.
தொடர்ந்து குன்றத்தூர் அருகேயுள்ள அமரம்பேடு கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர்.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு மற்றும் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது தொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
பின்னர் பேட்டியளித்த மத்தியக் குழுவின் தலைவர் குணால் சத்யார்த்தி, ஒட்டுமொத்த சென்னைக்கும் மழைநீர் வடிகாலுக்கான சிறப்பு திட்டம் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.