ஸ்ரீரங்கம் கோயில் விவகாரத்தை ஊதிப் பெரிதாக்குவதாகவும், சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்படும் பிரச்னைகளுக்கு அரசியல் சாயம் பூசுவது வாடிக்கையாகிவிட்டதாகவும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.