சென்னை அயனாவரத்தில் மழைநீர் வடிகாலில் கழிவுநீரை திறந்துவிட்டதை தட்டிக்கேட்ட பா.ஜ.க பிரமுகரை, திமுக கவுன்சிலரின் கணவர் தாக்கியதாக எழுந்த புகார் குறித்து அயனாவரம் போலீசார் விசாரித்துவருகின்றனர்.
பாளையம் பிள்ளை நகரில் கடந்த 6ம் தேதி கழிவுநீரை சுத்தம் செய்யும் பணியின்போது, அப்பகுதி கவுன்சிலர் லதா என்பவரின் கணவர் வாசுவின் உத்தரவின் படி கழிவுநீர் மழைநீர் வடிகாலில் விடப்பட்டதால், அங்கு வந்த பா.ஜ.க ஓ.பி.சி அணியின் மாவட்ட துணைத் தலைவர் சேகர் தட்டிக் கேட்டதாக தெரிகிறது.
இதனால் இரு தரப்பிற்கும் ஏற்பட்ட மோதலில் காயம் அடைந்த சேகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.