நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் நடைபயிற்சி மேற்கொள்ள, தமிழகத்தில் மாவட்டம் தோறும் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஹெல்த்வாக் நடைபாதை அமைக்க சாலைகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெசன்ட் நகர் முத்துலட்சுமி பூங்கா அருகே அமைக்கப்பட்டுவரும் ஹெல்த்வாக் நடைபாதையை ஆய்வு செய்த அமைச்சர், நடைபயிற்சி மேற்கொள்ளும் சாலைகளில் காலை 5 மணிக்கு தொடங்கி காலை 8 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை எனக்கூறினார்.
மழைகாலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால் வரும் 29 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிறும், ஆயிரம் இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சென்னையில் மீண்டும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.