அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தமிழக பா.ஜ.க. தொண்டர்களை மாநில அரசு கைது செய்வதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை கமலாலயத்தில் பேட்டியளித்த அவர், கைது விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க 27 மற்றும் 28ஆம் தேதிகளில் 4 பேர் கொண்ட கட்சி மேலிடக்குழு தமிழகம் வருவதாக தெரிவித்துள்ளார்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்றம் விடுமுறை என்பதால் திட்டமிட்டே வெள்ளிக்கிழமைகளில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொத்து அபகரிப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கவுதமி, கட்சியில் இல்லாவிட்டாலும் பா.ஜ.க. உறுதியாக உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது புகார் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார் .