முன்னாள் மத்திய அமைச்சரான தி.மு.கவைச் சேர்ந்த ஆ.ராசாவின் பினாமி பெயரில் உள்ள மேலும் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மத்திய அமைச்சராக இருந்தபோது, குருகிராமில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்காக தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் பினாமியாக நிறுவனங்களை தொடங்கி அதன் மூலம் லஞ்சம் பெற்றதாக ஆ.ராசா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறையினர் ஆ.ராசாவின் நெருங்கிய கூட்டாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவரின், கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்ட 55 கோடி ரூபாய் மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை நேற்று முடக்கியது குறிப்பிடத்தக்கது.