சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ,திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவந்த அவர், அதன்பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறை மருத்துவமனையில் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவரும் நிலையில், இன்று காலை அவரது இரண்டு கால்களும் மரத்துப்போனதாகக் கூறப்படுகிறது. சிறை மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வீல் சேரில் அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ரத்தம், இசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. புறநோயாளிகள் பிரிவில் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.