சென்னையில் பிரேக்குப் பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் கட்டுப்பாட்டை இழந்த BMW சொகுசுக் கார், மேம்பால பக்கவாட்டுச் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஆர்.ஏ.புரம் எம் ஆர் சி நகரைச் சேர்ந்த விபுஸ் என்ற இளைஞர் காலை இறகுப்பந்து விளையாடி விட்டு வீடு திரும்பியுள்ளார்.
கோவிந்தசாமி நகர் பாலம் அருகில் வந்து வாகனத்தை திருப்பும் பொழுது, பிரேக்கை மிதிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததாகக் கூறப்படும் நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது.