யூடியூபர் டி.டி.எஃப்.வாசனின் யூடியூப் தளத்தை மூடிவிட்டு, விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை எரித்து விட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் டூவீலரில் அதிவேகத்தில் சென்று விபத்தில் சிக்கிய வழக்கில் செப்டம்பர் மாதம் 19ம் தேதி டி.டி.எஃப்.வாசன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதால் அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.