சென்னை கண்ணகி நகரில், சமூக நலக்கூடம் அமைப்பதற்காக சுமார் 20 ஆடி ஆழத்திற்கு அடித்தளம் தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவு நீர் குளம் போல் தேங்கி, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒன்னேகால் கோடி ரூபாய் மதிப்பில் சமூக நலக்கூடம் அமைக்கும் பணி 7 மாதங்களுக்கு முன் தொடங்கியதாக கூறப்படுகிறது.
பணிகள் மந்தகதியில் நடைபெற்றுவருதாக குற்றம் சாட்டும் குடியிருப்புவாசிகள், பள்ளம் தோண்டும்போது குடியிருப்பில் உள்ள கழிவு நீர் தொட்டியில் ஏற்பட்ட விரிசலால் பள்ளத்தில் கழிவு நீர் குளம் போல் தேங்கி உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
சிறுவர்களோ, வாகன ஓட்டிகளோ தவறிவிழும் அபாயம் உள்ளதால் கட்டுமான பணிகளை துரிதப்படுத்துமாறும், சமூக நலக்கூடத்திற்கு பதிலாக காவல் நிலையமோ, மருத்துவமனையோ கட்டித்தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவுக் கோரிக்கை வைத்தனர்.