விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய சிறப்பு பேருந்துகள் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
பல மணி நேரமாக பேருந்துக்காக காத்திருப்பதாகவும், பேருந்துகள் குறித்து அதிகாரிகளிடம் கேள்வி கேட்டால் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் பயணிகள் குற்றஞ்சாட்டினர்.
ஆனால் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை மாநகரப் பேருந்துகள் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட்டன.