விரைவில் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் மல்லையா தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூரில் பேசிய அவர், வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவை இந்தாண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் சென்னையில் இருந்து டெல்லிக்கு விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் கூறினார்.
ஆரஞ்சு வண்ணத்தில் புதிய வந்தே பாரத் ரயில்கள் தயார் நிலையில் உள்ளதாக கூறிய அவர் விரைவில் இந்த ரயில்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.