தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்வதாகக் கூறி அறிமுகமான ஒருவர் தன்னை மறுமணம் செய்துக் கொண்டு 50 சவரன் நகை, 15 லட்சம் ரூபாயை ஏமாற்றி விட்டதாக பெண் ஒருவர் வேலூர் டிஐஜியிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் கணவர் இறந்ததால் மறுமணத்திற்கு ஆன்லைனில் வரன் தேடி திருப்பத்தூரைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
தங்க நகை, வெள்ளிபொருட்கள் சீர்வரிசையுடன் தொழில் செய்வதற்காக வினோத்குமாருக்கு 15 லட்சம் ரூபாய் பணமும் அவர் தந்ததாக கூறப்படுகிறது.
எனினும், தொழில் செய்யாமல் மதுபோதையில் சுற்றி வந்தவரை தட்டிக்கேட்டதால், சம்பந்தப்பட்ட பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.
அவசர உதவி எண் 100-க்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீஸார் அப்பெண்ணை மீட்டனர். விசாரணையில், வினோத்குமாருக்கு ஏற்கனவே 2 திருமணமாகி 18 வயதில் ஒரு மகன் இருப்பது தெரிய வந்தது.