கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் நீர் இருப்பு குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் மத்திய அரசு அதிகாரிகள்
ஆய்வு செய்ய வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்பிரச்சினையில் தமிழ்நாட்டு விவசாயிகள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
காவிரி வழக்கு வரும் 21 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், அதில் பிறப்பிக்கப்படும் உத்தரவைப் பொறுத்தே அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.