எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து தர குறைவாக எதுவும் பேசவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் சர்வதேச செஸ் வீரர்கள் பிரக்ஞானந்தா மற்றும் குகேசுக்கு பாராட்டு விழா நடைபெற்றது இந்த நிகழ்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,சேகர் பாபு,சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, 5 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் குறித்து தாம் தர குறைவாக எதுவும் பேசவில்லை என்றார் . மேலும் சனாதானத்தை எதிர்த்து பேசியது அவருடைய மனதை கஷ்டபடுத்தி உள்ளதா என தெரியவில்லை என்றும் கூறினார்.