சென்னையில், சவாரி சென்ற போது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஓலா டூவீலர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
சூளைமேட்டைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் மயிலாப்பூரில் உள்ள அண்ணன் வீட்டிற்குச் செல்வதற்காக இரவு நேரத்தில் ஓலா டூவீலரை புக் செய்து பயணம் செய்துள்ளார்.
டூவீலரை ஓட்டிய இளைஞர் வழியிலேயே இளம்பெண்ணிடம் அத்துமீறியதாகவும், இதுகுறித்து, செல்போன் மூலமாக தனது அண்ணனுக்கு பெண் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட இடத்தில் அந்த பெண் இறங்கிக் கொள்ளவும், அங்கு வந்த பெண்ணின் அண்ணன், ஓலா ஓட்டுனரை பிடித்து வைத்துக் கொண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, ராயப்பேட்டை போலீசார் அங்குச் சென்று, ஓலா ஓட்டுனரான முகப்பேரைச் சேர்ந்த 24 வயது ரமேஷை கைது செய்தனர்.
இவர், பகலில் பரோட்டோ மாஸ்டராகவும், இரவு மற்றும் விடுமுறை தினங்களில் ஓலாவில் டூவீலர் ஓட்டி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.