சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உறுப்பு தானம் வழங்கிய பெண்ணின் உடலுக்கு முதல்முறையாக அரசு மருத்துவமனையில் "ஹானர் வாக்" மூலம் மரியாதை செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது பெண், விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அந்தப் பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்தனர்.
கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகம் இரண்டு கண்கள் ஆகியவை தானம் செய்யப்பட்டன. இறந்தாலும் தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கி 5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த அந்த பெண்ணை கௌரவிக்க ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் விரும்பினர்.
பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு பேட்டரி காரில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது மருத்துவர்கள், செவிலியர்கள்,
மாணவ, மாணவிகள் இருபுறமும் நின்று கொண்டு இரு கரங்களையும் கூப்பி அஞ்சலி செலுத்தினர்.