ஆருத்ரா கோல்டு நிதிநிறுவன மோசடியில் தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பதிவில் நாகப்பாம்பு படத்தை வைத்ததைத் தொடர்ந்து அவரை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில் ஆர் கே சுரேஷ் 15 கோடி ரூபாய் அளவில் பணம் பெற்றது விசாரணையில் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் வெளிநாட்டிற்கு தப்பி சென்று தலைமறைவாக இருக்கும் ஆர் கே சுரேஷ் பிடிப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிறப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நாகப்பாம்பு படத்தை வைத்திருந்த ஆர்கே சுரேஷ் அடுத்த சில நிமிடங்களில் அதனை அழித்துள்ளார். இதையடுத்து, அந்தத் twitter பதிவை எந்த செல்போன் மற்றும் எந்த கணினியை பயன்படுத்தி பதிவிட்டுள்ளார். அதன் ஐபி முகவரி மற்றும் செல்போன் சிக்னல் ஆகியவை எங்கு உள்ளது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் நடிகர் ஆர் கே சுரேஷ் போலீசார் தேடி வருகின்றனர்.