கொடநாடு விவகாரத்தில் தங்களுக்கு மடியில் கனமில்லை எனக் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பியுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கொடநாடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலினின் தூண்டுதலின் பேரில்தான் ஓ.பி.எஸ் போராட்டம் அறிவித்துள்ளார் என்றார்.
விடியல் அரசு என்று கூறிவிட்டு விடியும் முன் டாஸ்மாக்கைத் திறக்க முயற்சிக்கின்றனர் என்று குற்றம்சாட்டிய ஜெயக்குமார், எதிர்ப்பு மட்டும் தெரிவிக்கவில்லை என்றால் 7 மணிக்கே கடையை திறந்து இருப்பார்கள் என்றார்.