அமெரிக்க கடற்படையின் மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் யு.எஸ்.என்.எஸ் சால்வர் கப்பல் பழுது பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளது. வட சென்னையில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்திற்கு வந்த அந்த கப்பலை துணைத் தூதர் ஜூடித் ரேவின் உள்ளிட்ட அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் எல் அண்ட் டி நிறுவன உயரதிகாரிகள் வரவேற்றனர்.
இந்தியா -அமெரிக்கா கடல் பாதுகாப்பு ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக அமெரிக்கா கடற்படை சார்பில் அமெரிக்க போர் கப்பல்களை பழுது பார்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எல் அண்ட் டி நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 26ஆம் தேதி கையெழுத்தானது. அதன் தொடர்ச்சியாக கிழக்கு பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக செயல்பட்டு வரும் யுஎஸ்என்எஸ் சால்வர் கப்பல் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு வந்துள்ளது.
ஏற்கனவே காட்டுப்பள்ளி துறைமுகத்தில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் சார்லஸ் ட்ரூ, மேத் யுவ் பெரி ஆகிய இரு அமெரிக்கா கப்பல்களுக்கு பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.