சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களே சட்டத்தை மீறுவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்ற உத்தரவின்படி இந்துசமய அறநிலையத்துறை ஒரு அரசாணையை பிறப்பித்து கனகசபையின் மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் அதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறிய அமைச்சர், இதில் யார் சட்டத்தை மீறுவது என்று கேள்வி எழுப்பினார்.