சாலை விதிமுறைகளை மீறுவோரைக் கண்டறிய சென்னை சாலையில் வலம் வரும் ரேடார் ரோந்து வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இந்த வாகனங்கள் மூலமாக கடந்த 12 நாட்களில் 3,948 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் முதன்முறையாக ரோந்து வாகனங்களில் இருந்தே ஏ.என்.பி.ஆர் கேமரா மூலமாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு உடனடி அபராதம் செலுத்தும் முறையை சென்னை காவல்துறை அறிமுகப்ப டுத்தியது.
இதனை கடந்த மே மாதம் 31 ஆம் தேதி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.இந்த வாகனத்தில் விதிமீறல்கள் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் அவற்றை சரிபார்த்த பிறகு ரசீது உருவாக்கப்படுகிறது. விதிகளை மீறுபவருக்கு உடனடியாக இந்த ரசீது அனுப்பப்படும் என கூடுதல் ஆணையர் கபில் தெரிவித்தார்.