கர்நாடகாவில் ம.ஜ.த.வின் வாக்குகள் காங்கிரசிற்கு சென்றதால் அக்கட்சி வெற்றிப்பெற்றதாகவும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூருவில் பாஜகவே அதிக இடங்களை வென்றதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இது குறித்து பேட்டியளித்த அவர், கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவை நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக கருத முடியாது எனக்கூறினார்.
மேலும், தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சி பணி மேற்கொள்ள ஏதுவாக கர்நாடக தேர்தலில் பணியாற்ற தமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.