சென்னையில் துப்பாக்கியுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ரைஸ் புல்லிங் கும்பல் ஒன்று போலீசிடம் பிடிபட்டுள்ளது.
கோயம்பேடு ஆம்னி பேருந்து அருகே உள்ள தங்கும் விடுதியில் சந்தேகப்படும்படியான வகையில் நான்கு இளைஞர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற போலீசார், கேரளாவைச் சேர்ந்த குபாய்ப், இர்ஷாத், ஜித்து ஆகியோரையும் பெங்களூருவைச் சேர்ந்த சிவா என்பவனையும் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
ரைஸ் புல்லிங் மோசடி கும்பல் என்பது விசாரணையில் தெரியவந்த நிலையில், அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி, எட்டு தோட்டாக்கள், கை விலங்கு ஒன்று, செம்பு கலசம், 2 கண் கண்ணாடிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
எதிரில் நிற்பவரை நிர்வாணமாகக் காட்டும் கண்ணாடி என்று சொல்லி, யாரிடமோ அவற்றை விற்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.