சென்னையில் நடைபெறும் சி எஸ் கே - பஞ்சாப் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டியைக் காண தேர்ந்தெடுக்கப்பட்ட தென் மாவட்ட ரசிகர்கள் சுமார் 750 பேர் "விசில் போடு" என்ற பெயரிலான விரைவு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ரசிகர்களுக்காக புனே வரை இயக்கப்பட்ட இந்த விசில் போடு விரைவு ரயில், தற்போது மீண்டும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களுக்காக இயக்கப்பட்டுள்ளது.
பயண செலவு ,உணவுச் செலவு ,தங்கும் செலவு அனைத்தையும் ஏற்று இலவசமாக டீசர்ட் மற்றும் டிக்கெட்டுகளை வழங்கி சிஎஸ்கே நிர்வாகம் அவர்களை அழைத்து வந்துள்ளது.
இம்முறை பெண் ரசிகர்களுக்கென இரண்டு பிரத்யேக பெட்டிகள் ஒதுக்கி, சுமார் 200 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். கடந்த 21-ஆம் தேதி முதல் சி எஸ் கே அணி குறித்த வினா விடை ,கலந்தாய்வு போட்டிகள் நடத்தப்பட்டு, பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.